புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற ‘நமக்காக நாம்’ பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
குப்பிளான் தெற்கு, புன்னாலைக்கட்டுவன் அறிவொளி கலையரங்கத்தில் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு அறிவொளி சனசமூக நிலைய தலைவர் மரியசீலன் தலைமையில் இடம்பெற்ற பரைப்புரைக் கூட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த சி.அ.யோதிலிங்கம், செல்வின் இரணியேஸ் மரியாம்பிள்ளை, சுரேஸ் பிரேமச்சந்திரன், ந.சிறீகாந்தா, வி.மணிவண்ணன் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர் பீற்றர் உள்ளிட்ட அப்பகுதி வாழ் மக்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் பிரதிநிதிகள் சங்கு சின்னத்துக்கு ஆதரவு கோரி உரைகளை ஆற்றியிருந்தனர்.