சங்கே முழங்கு | Sange Mulanku

‘நமக்காக நாம்’ பரப்புரை வடமராட்சியில் முன்னெடுப்பு!

நமக்காக நாம் பரப்புரை நடவடிக்கை வடமராட்சியின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜனதிபதித்தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் வடமராட்சி பருத்தித்துறை நகர், சந்தைமேற்கு ஒழுங்கை, கடற்கரை வீதி வழியே வியாபாரி மூலை, முனை, கொட்டடி, தொம்மையபர் கோயில் பகுதி மற்றும் மாதனை, மூன்றாம் குறுக்குத்தெரு, நான்காம் குறுக்குத்தெரு மற்றும் உடுப்பிட்டி பகுதிக்குட்பட்ட இலகடி, இலக்கணாவத்தை, ஆதியாமலை, கோம்பு, தூப்புலம் உள்ளிட்ட இடங்களில் வீடு வீடாக சென்றும் வீதியால் பயணிப்பவர்களிடமும் துண்டுபிரசுரங்களை வழங்கி சங்கு சின்னத்துக்கு ஆதரவுகோரி பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.