தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் வட்டுக்கோட்டை தொகுதி தலைவர் ஈ.சரவணபவன் ஆகியோர் சங்குக்கு ஆதரவாக மேடையேறியுள்ளனர்.
தமிழ்ப் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை கிளையின் ஏற்பாட்டில் மூளாய் – வேரம் பகுதியில் உள்ள அக்கினி வைரவர் கோவில் முன்றலில் இன்று (17) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் செயலாளர் பற்றிக் தனுஷ்
தலைமையில் இடம்பெற்ற ‘நமக்காக நாம்’ பொதுக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ்த்தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த சி.அ.யோதிலிங்கம், மூத்த போராளி செழியன் உள்ளிட்ட தமிழரசு கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பிரமுகர்கள் பலரும் பங்கேற்று சங்கு சின்னத்துக்கு ஆதரவாக உரையாற்றிருந்தனர்.
இதன்போது தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள், பிரதேச மக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.